மே மாத ராசி பலன்கள் 2024 - தனுசு

மே மாத ராசி பலன்கள் 2024 - தனுசு

எந்த காரியத்தையும் தனித்துவமாக செயல்படுத்தும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் சனி அமர்ந்து உங்களின் பணிகளை சரியாக செய்ய முழு ஒத்துழைப்பைத் தருவார். உங்களின் ராசிநாதன் விரையஸ்தானத்தையும், தனஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வாழ்வில் புதிய புத்துணர்வுகளை ஏற்படுத்தும்.
 
குறுகிய காலத்தில் உங்களின் வளர்ச்சியில் ஏற்றம் வரும். குரு தனஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதாரத்தில் வளர்ச்சியைப் பெற்று நலம் பெறுவீர்கள். ஏழரை சனி காலங்களில் பட்ட பல கடன்களிலிருந்து விடுதலை பெறுவதும், தேவையற்ற செலவுகளை குறைத்து கொண்டு சேமிப்புகளை உருவாக்கி கொள்வதும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
 
எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள் இதனால் நன்மைகள் உண்டாகும். வங்கி சேமிப்புகளும், புதிய வங்கி கடன் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வதும் மேன்மையை பெற்றுத் தரும். 
 
காரியத்தில் கவனம் செலுத்தி நீங்கள் நினைத்ததை வெற்றி கரமாக  செய்து முடிப்பீர்கள். வளர்ச்சி பாதையை உன்னிப்பாக கவனித்து செயல்படுத்துவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செயல்கள்.. பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுத் தரும். கலை துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.
 
எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவதால்... எந்த இடையூறுமின்றி செயல்படுவீர்கள். மாணவர்களின் குறுகிய கால பயிற்சி கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்க.. புதுபித்துக் கொள்ள.. சிலருக்கு வாய்ப்பு அமையும். சிறப்பான மாதமாக அமையும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
13-05-2024 திங்கள் காலை 08.24 முதல் 15-05-2024 புதன் மாலை 06.13 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், வெண்மை, நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, வடமேற்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், சனி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளின் கௌமாரி அம்மன் வழிபாடு செய்து வேப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு மலர் மாலை சாற்றி வேண்டிக் கொள்ள தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.